வெளியூருக்கு சென்ற கணவன்! தனியாக இருந்த மனைவி... எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இளம்பெண் தனது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கோவையை சேர்ந்தவர் ஈஸ்வரசாமி (30). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவருக்கும் மாலதி (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு சசிக்குமார் (7) என்ற மகனும், மகாஸ்ரீ (1) என்ற பெண் குழந்தையும் இருந்தது.

மாலதி சிறுசேமிப்பு சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் அக்கம், பக்கத்தினர் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் தேங்காய் உரிக்கும் வேலைக்காக ஈஸ்வரசாமி பழனிக்கு சென்று விட்டார்.

மகன் சசிக்குமார் பள்ளிக்கு சென்றுவிட்டார். மாலதி தனது மகளுடன் வீட்டில் இருந்தார்.

மாலை 3 மணிக்கு பக்கத்து வீட்டு பெண் ஒருவர், பொதுக்குழாயில் தண்ணீர் வந்ததால், அதுபற்றி சொல்வதற்காக மாலதியின் வீட்டுக்கு சென்றார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர்கள் சத்தம்போட்டு மாலதியை அழைத்துள்ளார்.

ஆனால் மாலதியிடம் இருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகத்துடன் வீட்டின் அறைக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது மாலதி தனது குழந்தையுடன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டு பெண், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கருகிய நிலையில் இருந்த மாலதி மற்றும் மகாஸ்ரீ ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையில் மாலதி எழுதி வைத்திருந்த கடிதத்தில், என்னால் யார் மனமும் புண்படக்கூடாது. சீட்டு பணம் வீட்டில் உள்ளது. அனைவருக்கும் கொடுத்து விடவும். என்னை மன்னித்து விடுங்கள் மாமா என்று எழுதப்பட்டு இருந்தது.

பொலிசார் கூறுகையில், ஈஸ்வரசாமி புறப்பட்டபோது, சாப்பாடு செய்து இருக்கிறாயா? என்று மாலதியிடம் கேட்கையில் அவர் இல்லை என்று கூறினார். இதனால் ஈஸ்வரசாமி கோபித்துக்கொண்டு சென்று விட்டார்.

இதையடுத்து தனது மாமியார் தைலாவை செல்போனில் தொடர்பு கொண்டு, மாலதி எனக்கு சாப்பாடு செய்து கொடுப்பதில்லை என்று புகார் கூறியுள்ளார்.

உடனே தைலா தனது மகள் மாலதியை தொடர்பு அவரை திட்டியுள்ளார்.

கணவரும், தாயாரும் சாப்பாடு செய்து கொடுக்க வில்லை என்று கூறியதால் விரக்தி அடைந்த மாலதி தனது குழந்தையுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்