10 பேர் கொண்ட கும்பலால் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்

Report Print Vijay Amburore in இந்தியா

மதுரையில் 10 பேர் கொண்ட மர்மகும்பலால் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த திமுக பிரமுகரான ராஜா (47), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதேபோல வட்டிக்கு பணம் கொடுப்பது, சேவல் சண்டை போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதனால் ராஜா அந்த பகுதியில் சற்று பிரபலமானவர்.

இந்த நிலையில் ராஜா நேற்று இரவு 11 மணியளவில் மதுக்கடையில் இருந்து வீட்டிற்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்துள்ளார்.

அப்போது அரிவாள்களுடன் அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜாவை சுற்றிவளைத்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார்.

ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் வாடிப்பட்டி ஸ்ரீதர் தரப்புக்கும், ராஜா தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் படுகொலை செய்யப்பட்ட்டார். இதற்கு ராஜா தான் காரணாம் என வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராஜா கொல்லப்பட்டிருப்பதால், ஸ்ரீதர் தரப்பினர் பழிவாங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers