லண்டனில் இருந்து மகள் ஊருக்கு வர தாமதம்! நளினியின் பரோலை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 30 நாள் பரோல் வழங்கி கடந்த மாதம் 5 ஆம் திகதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து யூலை 25 ஆம் திகதி முதல் நளினி சிறை விடுப்பில் உள்ளார்.

இந்நிலையில் லண்டனில் உள்ள நளினியின் மகள் ஹரித்ரா ஊருக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் நிறைவடையாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதோடு ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்