இளைஞருடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுமி.. அதன்பின்னர் நடந்த பெரும் அசம்பாவிதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சிறுமியுடன் இளைஞர் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த விவகாரத்தால் ஏற்பட்ட சண்டையில் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள பெருமாக்கநல்லூர் தெற்கு குடியான தெருவை சேர்ந்த சதாசிவம் மகன் சூர்யா (22).

அதே ஊரை சேர்ந்தவர் கருணாகரன்(42). இவர், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.

இவருடைய உறவினரான 17 வயது சிறுமி ஒருவரும், சூர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் சூர்யாவும், அந்த சிறுமியும் கடந்த 18-ம் திகதி திடீரென தலைமறைவாகி விட்டனர்.

இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு சூர்யா வீட்டுக்கு வந்து அவரின் குடும்பத்தினரை தாக்கி வீட்டையும் அடித்து உடைத்தனர்.

இதற்கு பதிலடியாக சூர்யாவின் உறவினர்கள் ஒன்று திரண்டு சிறுமியின் உறவினர் கருணாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி, அவருடைய வீட்டை சூறையாடினர்.

இந்த மோதல் சம்பவத்தில் கருணாகரன் கட்டையால் தாக்கப்பட்டார். தலையில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரின் பொலிசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன்(24), கார்த்தி (28), தினேஷ் (25), குருமூர்த்தி (30), பிரகாஷ் (24), மணிகண்டன் (24), 17 வயது சிறுவன் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து சம்பவம் நடத்த பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, ஆனால் வீட்டை விட்டு ஓடிப்போன காதல் ஜோடி எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்