கடையில் தேநீர் தயாரித்த முதல்வரின் வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் தேநீர் கடை ஒன்றில் தேநீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி, திகா பகுதியில் உள்ள தத்தாப்பூர் கிராமத்திற்கு சென்றார்.

அங்கு உள்ளூர் மக்களுடன் உரையாடிய அவர், பின்னர் தேநீர் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடையில் அவரே தேநீர் தயாரித்து, சுற்றியிருந்தவர்களுக்கு விநியோகம் செய்தார். இந்நிலையில், தான் தேநீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘சில நேரங்களில் இதுபோன்ற சின்ன சின்ன விடயங்கள் நமது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டுவரும்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்