தட்டில் கொடுக்கப்பட்ட ஒம்லெட்டில் புழுக்கள்!.. வைரலான புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் புகழ்பெற்ற டெக்கான் குயின் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட ஒம்லெட்டில் புழுக்கள் இருந்த சம்பவம் விவாத பொருளாகியுள்ளது.

மும்பையில் இருந்து புனேவுக்கு செல்லும் டெக்கான் குயின் ரயில் மிகவும் மதிப்புமிக்க ரயிலாக பார்க்கப்படுகிறது.

இந்த ரயிலில் சாகர் கலே என்ற பயணி பயணித்த நிலையில் அவருக்கு ஒம்லேட் உணவு தட்டில் வைத்து கொடுக்கப்பட்டது.

அப்போது அந்த தட்டில் புழுக்கள் இருந்ததை பார்த்து சாகர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து ரயில்வே ஊழியர்களிடம் அவர் புகார் கொடுத்த நிலையில் வேறு உணவை கொடுப்பதாக அவர்கள் கூறினர்.

இருப்பினும் அது குறித்து புகைப்படம் எடுத்த சாகர் சமூகவலைதளத்தில் அதை வெளியிட வைரலானது.

இது தொடர்பாக ரயில்வே துறையில் செய்தி தொடர்பாளர் மனோஜ் கூறுகயில், சாகர் அளித்த புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்