ப.சிதம்பரத்திற்கு 5 நாட்கள் சிபிஐ காவல்! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Report Print Vijay Amburore in இந்தியா

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு 5 நாட்கள் சிறைக்காவல் விடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இன்று டெல்லியில் உள்ள ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு சிதம்பரம் பதிலளிக்கவில்லை என சிபிஐ தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் குற்றம் சுமத்தினர்.

மேலும், 5 நாள் சிறைக்காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கோரினர். இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, இன்று இரவு முதல் 5 நாட்கள் சிபிஐ விசாரணைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

மேலும், தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே சிதம்பரம் வெளி நபர்களுடன் பேசலாம் எனவும் மற்ற நேரம் சிபிஐயின் லாக் அப்பில் தான் வரும் 26ம் தேதி வரை இருக்க வேண்டும் எனவும் கூறி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்