நிர்வாணப்படுத்தி கல்லூரி மாணவர்கள் செய்த செய்த மோசமான செயல்... வைரலாகும் வீடியோவின் பின்னணி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவின் ஜுனியர்களை நிர்வாணப்படுத்தி சீனியர்கள் ராக்கிங் செய்த வீடியோ வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரிஷா மாநிலம் சம்பல்பூரில் டெக்னிக்கல் யுனிவர்சிட்டி இயங்கி வருகிறது. இந்த யுனிவர்சிட்டியைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள், ஜுனியர்களை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

ஒரிசா அரசின் நிதியுதவியுடன் இயங்கி வருகிறது. வீர் சுரேந்தர் சாய் டெக்னிக்கல் யுனிவர்சிட்டி.

முதல் வீடியோவில் முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் யுனிவர்சிட்டி வளாகத்தில் ஒன்று திரண்டு மேடை மீது ஏறி நடனமாடுகின்றனர். அவர்கள் உடம்பில் உள்ளாடையைத்தவிர வேறு எதுவும் இல்லை.

சீனியர்களின் கட்டாயத்தின் பேரில் வற்புறுத்தப்பட்டு இந்த ராகிங் கொடுமை நிகழ்ந்துள்ளது. ஒரிசா மாநில திறன்மேம்பாடு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பிரேமானந்த் நாயக், இந்த வீடியோவின் உண்மைநிலையை அறிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக 10 மாணவர்களை டி-பார் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி உடனிருந்த 52 மாணவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது முதன்முறையல்ல எனவும் கடந்த வருடம் இதே போன்று ஒரு புகார் எழுந்துள்ளது.

அதன் காரணமாக நான்காம் ஆண்டு மாணவன் ஒருவன் 1 வருடம் இடைநீக்கம் செய்யபட்டு, உடனிருந்த மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers