லொறியுடன் நேருக்கு நேர் மோதிய கார்: 7 வயது சிறுவன் சீட் பெல்ட்டில் சிக்கி பரிதாப மரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் லொறியுடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் சீட் பெல்ட்டில் சிக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தின் தாக்கத்தில் சீட் பெல்ட், சிறுவனின் மார்பிலும் வயிற்றிலும் இறுகியதால் உள்ளுறுப்புகளுக்கு ஏற்பட்ட சிதைவே மரண காரணம் என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த எஞ்சிய மூவர் கொச்சி நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பித்துள்ளனர்.

சம்பவத்தன்று தமிழகத்தின் சென்னையில் இருந்து ஆலப்புழா பகுதியில் உள்ள குடியிருப்புக்கு தாமஸ் மற்றும் மரியம் தம்பதிகள் தங்களின் இரு பிள்ளைகளுடன் காரில் சென்றுள்ளனர்.

அப்போது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், பகுதியில் இருந்து வந்த லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில் சம்பவயிடத்திலேயே 7 வயதான ஜோஹன் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. படுகாயமடைந்துள்ள தாமஸ் மற்றும் மரியம் உள்ளிட்ட மூவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

விபத்தை அடுத்து காரில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள Air Bag செயல்பட்டதை அடுத்து தாமஸ் மற்றும் மரியம் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

ஆனால் சிறுவன் ஜோஹன் இருந்த பகுதியில் Air Bag செயல்பவில்லை என்றே முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்