முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்ததால், கடந்த 9ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது 66வது வயதில் இன்று காலமானார்.

இந்த தகவலை எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது. ஏற்கனவே அவருக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. அத்துடன் அவரால் மக்களவை தேர்தலிலும் போட்டியிட முடியவில்லை.

2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான மோடியின் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, பா.ஜ.கவின் மாநிலங்களவை குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்