அவர்தான் உதவினார்.. அருண் ஜெட்லி குறித்து உருக்கத்துடன் கூறிய சேவாக்!

Report Print Kabilan in இந்தியா

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி(66) இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அடிப்படையில் வழக்கறிஞரான அருண் ஜெட்லி, அரசியலையும் தாண்டி டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக பதவி வகித்தார்.

இந்நிலையில், அவரது மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அருண் ஜெட்லி குறித்து அவர் கூறுகையில்,

‘அருண் ஜெட்லி ஜி-யின் மறைவு வலியை தருகிறது. சமூக பணிகளில் சேவைகளையும் தாண்டி, டெல்லி வீரர்கள் பலர் இந்திய அணியில் விளையாடியதற்கு அவரது பங்கு மிகப்பெரியது.

டெல்லியில் இருந்து பல வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சமயம், அவரது தலைமையின் கீழ் DDCA இருந்ததால் நான் உட்பட பல வீரர்கள் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு பெற்றோம்.

அவர் வீரர்களின் தேவை என்ன என்பதை கேட்டு, பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். தனிப்பட்ட முறையில் அவருடன் நல்ல அழகான உறவு எனக்கு இருந்தது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்