உன் மனைவியை கொன்று புதைத்து விட்டேன்! வெளிநாட்டில் வசித்த தமிழருக்கு வாட்ஸ் அப்பில் வந்த அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான பெண்ணை கொலை செய்து புதைத்த நபர் அந்த தகவலை வெளிநாட்டில் வசித்த பெண்ணின் கணவரிடம் வாட்ஸ் அப்பில் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் பெருமாள். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி பாண்டிச்செல்வி (34). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

பாண்டிச்செல்வி தனது குழந்தைகளுடன் உள்ளூரில் வசித்து வந்த நிலையில் ரெங்கையா (37) என்ற மாற்றுதிறனாளி நபருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பாண்டிச்செல்வி அடிக்கடி ரெங்கையாவிடம் பணம், நகை கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் அவர் அதை கொடுக்க மறுத்தார்.

இந்நிலையில் சம்பத்தன்று பாண்டிச்செல்வி, ரெங்கையா ஆகியோர் தனியாக சந்தித்து உள்ளனர்.

அப்போது பாண்டிச்செல்வி நகை, பணம் கேட்டு ரெங்கயாவை மீண்டும் தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த அவர் கத்தியை எடுத்து பாண்டிச்செல்வியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இதைத்தொடர்ந்து பாண்டிச்செல்வியின் உடலை அந்த பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளார். பின்னர் மலேசியாவில் உள்ள பெருமாளுக்கு உனது மனைவியை கொலை செய்து, புதைத்து விட்டேன் என வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பினார் ரெங்கையா.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெருமாள், பாண்டிச்செல்வி தந்தை சோனைமுத்துவை தொடர்பு கொண்டு பாண்டிச்செல்வி கொலை குறித்து தகவல் தெரிவித்தார்.

பின்னர் சோனைமுத்து பொலிசில் இது குறித்து புகார் கொடுத்த நிலையில் பொலிசார் ரெங்கையாவை கைது செய்தனர்.

விசாரணையில் பாண்டிச்செல்வியை கொலை செய்ததை ரெங்கையா ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவர் காட்டிய இடத்தில் இருந்து பாண்டிச்செல்வியின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

இந்நிலையில் பாண்டிச்செல்வி உடலை புதைப்பதற்கு உதவிய தங்கராஜ் என்பவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers