தரையில் சடலமாக கிடந்த தம்பதி... வீட்டு சுவற்றில் எழுதப்பட்டிருந்த உருக்கமான வார்த்தைகள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இறப்பதற்கு முன்னர் வீட்டு சுவற்றில் அவர்கள் எழுதி வைத்திருந்த வார்த்தைகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (70). இவர் மனைவி சுவர்ணா (68). தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் மகன் மற்றும் மருமகள் நேற்று வேலை முடிந்து இரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது கிருஷ்ணமூர்த்தியும், சுவர்ணாவும் தரையில் சடலமாக கிடந்தனர்.

மேலும் வீட்டு சுவற்றில், நரகத்தில் இருந்து சொர்க்கத்துக்கு செல்கிறோம், எங்கள் சாவுக்கு மகனும், மருமகளும் தான் காரணம், அவர்கள் எங்களை துன்புறுத்தியதியது மிகவும் வலித்தது என எழுதப்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இரண்டு சடலங்களையும் கைப்பற்றிவிட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பொலிசார் கூறுகையில், இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். சுவர்ணாவுக்கு உடல்நிலை மிகவும் பாதிப்படைந்ததால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.

தம்பதியின் மகள் இதே பகுதியில் வசித்து வரும் நிலையில் தினமும் மாலை பெற்றோரை காண வந்துவிட்டு 7 மணிக்கு திரும்பிவிடுவார்.

கிருஷ்ணமூர்த்தியின் மகனும், மருமகளும் தினமும் இரவு தாமதாக தான் வீட்டுக்கு வருவார்கள்.

தங்களை அனாதை ஆசிரமத்தில் அவர்கள் சேர்த்து விடுவார்கள் என வயதான தம்பதிகள் பயந்துள்ளனர், இது தொடர்பாக மகனிடம் வாக்குவாதமும் செய்துள்ளனர்.

ஆனாலும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுவர்ணாவை அவரின் மகன் நன்றாக தான் கவனித்து கொண்டார் என அவர் சகோதரி கூறியுள்ளார்.

தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers