தமிழகத்தில் ஆபாசமாக பேசிவிட்டு தீக்குளிக்க முயன்ற இலங்கை தமிழர்... வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையை சேர்ந்தவர் ஜோயி (30). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் வந்துள்ளார்.

நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது வேலையில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோட்டாறு காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த ஜோயி தான் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும், தமிழகத்தில் பல இடங்களில் பணிபுரிந்துள்ளதாகவும் கூறினார். மீண்டும் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தாராம்.

மேலும் , ஜோயி ஆபாசமாக பேசியதால் எச்சரித்து பொலிசார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த அந்த ஜோயி தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம்.

உடனடியாக பொலிசார் அவரை தடுத்தனர். விசாரணையில், அவருக்கு மனநல பிரச்சனை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் ஜோயியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers