தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்... கோவையில் இரண்டு பேர் சிக்கினர்: மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட்

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக நகர காவல்துறையினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, ரெட் அலர்ட் எனப்படும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது,

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு ஒரு நாள் கழித்து, சிறப்பு புலனாய்வு குழு தமிழகத்தின் கோவையில் இருந்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவர் கோவை உக்கடத்தைச் சேர்ந்த ஜாகீர், சென்னையைச் சேர்ந்த சித்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லஷ்கர்-இ-தொய்பா குழு உடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்பைடயில் கைது செய்யப்பட்ட நபருடன் இருவருமே தொடர்பு கொண்டதாக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கேரளாவின் திரிசூரில் வைத்து காதர் ரஹீம் என்ற நபரை அம்மாநில பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கோலையில் கைது செய்யப்பட்ட இருவருமே காதர் ரஹீமுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்