மனைவி, தந்தையை கொன்றுவிட்டு அப்பாவி போல உறவினர்களுடன் உணவருந்திய கணவன்

Report Print Vijay Amburore in இந்தியா

கொல்கத்தாவில் மனைவி மற்றும் தந்தையை கொலை செய்துவிட்டு பொறுமையாக உறவினர்களுடன் சென்று உணவருந்திய கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சீனாவை பூர்விகமாக கொண்ட லீ வான் தோ (66) என்பவர் தன்னுடைய மனைவி லீ ஹான் மை (62) மற்றும் அவருடைய தந்தை லி கா சாங் (89) ஆகியோருடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பெண்களுடன் விருந்துக்கு செல்வதாக மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த லீ வான் திடீரென அங்கிருந்த அலுமினிய வாளியை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

சத்தம் கேட்டு அவருடைய தந்தை லி கா சாங் அறையிலிருந்து வெளியில் வந்து பார்த்துள்ளார்.

உடனே அவரையும் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பின்னர், தடயங்களை அழித்தட்டுவிட்டு பின்பக்க கதவின் வழியாக வெளியில் சென்று உறவினர்களுடன் மதிய விருந்துக்கு சென்றுள்ளார்.

ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பிய அவர், ஒன்றுமே நடக்காதவர் போல நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார். பின்னர் மனைவிக்கு போன் செய்வதை போல நடித்துவிட்டு, வீட்டின் மேற்புறம் வழியாக உள்ளே நுழைந்து பக்கத்து வீட்டார்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இருவரும் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நீண்ட நேர சோதனைக்கு பின்னர், தாக்குதலுக்கு பயன்படுத்திய வாளியை கண்டுபிடித்தனர்.சந்தேகத்தின் பேரில் அவருடைய கணவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது ஆரம்பத்தில் குற்றத்தை மறைத்த அவர், பின்னர் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் அவரை கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்