5 மனைவிகளுடன் கார், வீடு என சொகுசாக வாழ கணவன் செய்த மோசமான செயல்

Report Print Abisha in இந்தியா

போலி நகைகளை அடகு வைத்து 25 லட்சம் வரை ஏமாற்றி 5 மனைவிகளுடன் சொகுசாக வாழ்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் சீர்காழி, சட்டநாதபுரம், புத்தூர், மங்கைமடம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள அடகு கடைகளில் தங்கநகை எனக்கூறி போலி நகைகளை அடகு வைத்து 10 லட்சம் வரை பணத்தை பெற்று மாதவன் என்பவனை போலீசார் சிசிடிவி உதவியுடன் கைது செய்துள்ளனர்.

அவரை விசாரித்த போது அவர் செய்து வந்த திருட்டுதனம் தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல அடகு கடைகளில் தங்க நகை என கூறி 25 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தைப் பெற்று வந்துள்ளார். மேலும் அப்பணத்தின் மூலம் தனது 5 மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கையை வாழ்வதற்காக சொகுசு வீடு , கார், புது பைக் என ஆடம்பர வாழ்க்கை வந்துள்ளதும் தெரிய வந்தது.

விசாரணைக்கு பின் பொலிசார், அவரிடம் இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பல பெயர்களில் போலி ஆதார் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை,ஓட்டுநர் உரிமம் என பல அடையாள அட்டைகள் தயாரித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்