15ஆண்டுகளாக பிச்சை எடுத்த நபர் - லட்சாதிபதியாக இறந்த சோகம்!

Report Print Abisha in இந்தியா

15ஆண்டுகளாக கோவில் பிச்சை எடுத்த நபர் 1.83 லட்சம் ரூபாய் பணத்தை சேர்ந்து வைத்திருந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆந்திராவின் ராஜமகேந்திரவரத்தில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு பிச்சை எடுத்து வந்த காஞ்சி நாகேஸ்வரராவ் என்பவர், பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அவர்கள் தட்டில் போடும் பணத்தை வாங்கி கொண்டு அங்கேயே கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதுள்ளது.

இதன் காரணமாக அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சி நாகேஸ்வரராவின் உடல்நிலை அண்மையில் மிகவும் மோசம் அடைந்தது. கடந்த சனிக்கிழமை இரவு கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது அவர் உயிரைவிட்டார்.

இதுகுறித்து அறிந்த ராஜமகேந்திரவரம் கோயில் அதிகாரிகள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அவரைது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் கோயிலில் விசாரணை நடத்தினர்.

பின் அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் ரூ.1.83 லட்சம் இருப்பதை கண்டு பொலிசாருக்கு ஆச்சர்யம் அடைந்தனர். இந்த பணத்தை காஞ்சி நாகேஸ்வரராவ் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்ததை விசாரணையில் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பொலிசார், அந்த பணத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்தை எடுத்து நாகேஸ்வரராவின் இறுதிச் சடங்கை நடத்தினர். மீதமுள்ள பணத்தை அப்படி கோயிலில் வாழும் சாதுக்களுக்கே அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்