விஜயகாந்த் உடல்நிலை... மேடையிலேயே கண் கலங்கி உடைந்த மகன்

Report Print Basu in இந்தியா

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவதாக அவரது மகன் விஜயபிரபாகரன் கண்ணீர் விட்டு கலங்கியுள்ளார்.

விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத்தில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், நிச்சயமாக தலைவர் சிங்க நடைபோட்டு மிக விரைவில் வருவார். 2020 தை மாதத்திற்கு பிறகு பாருங்கள் கேப்டன் எப்படி வருவார் என்று. இதை நான் அவர் மகனாக கூறவில்லை, தேமுதிக அடிப்படை தொண்டன் என்ற திமிரில் சொல்கிறேன்.

இதன்போது, என் தலைவன் மீண்டும் வருவார் என கூறி விஜயபிரபாகரன் மேடையிலேயே கண் கலங்கினார், இதனையடுத்து, தொண்டர்கள் கேப்டன்.. கேப்டன் என முழங்க பலர் விஜயபிரபாகரனை சமாதானப்படுத்தினர்.

பின்னர் தன்னை தேத்திக் கொண்ட விஜயபிரபாகரன், இது ஆனந்தக் கண்ணீர் என்று கூறினார். மேலும், விஜயகாந்தின் உடல்நிலை மிக சீராக உள்ளது. ஆனால் அவரது உடல் நிலை குறித்து சிலர் அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் தனது தாய் பிரமலதா, தனி நபராக கட்சியை வழிநடத்தி வருவதாக புகழாரம் சூடினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்