வேறு நபருடன் தவறான உறவு.. கைவிட மறுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் வேறு ஒருவருடன் தவறான உறவு வைத்திருந்த மனைவியை, அவரது கணவன் மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில் சனாகலியா படா என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வரும் தம்பதியரில், மனைவிக்கு வேறு ஒருவருடன் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் மனைவியின் உறவுக்காரர் என்பதும், அப்பெண்ணின் கணவனுக்கு தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரையும் அவர் பலமுறை கண்டித்துள்ளார்.

ஆனால், அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த ஜோடி வெளியே சுற்றிவிட்டு வீடு திரும்பியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கணவன் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து, குறித்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே தள்ளினர். அத்துடன் அப்பெண்ணின் தலையை மொட்டை அடித்து ஊர்வலமாகவும் அழைத்து சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணின் சகோதரர் பொலிசில் புகார் அளித்ததால், இது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்