ஆடை மாற்றுவதை எட்டிப்பார்த்த நண்பன்... புகார் கொடுத்த மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் கணவரின் நண்பன் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்த மனைவியை கணவரே குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மணிமேகலை என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் உதயகுமார் அடிக்கடி தன்னுடைய வீட்டிற்கு நண்பர்களை அழைத்து வந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல உதயகுமார் தன்னுடைய நண்பர்களுடன் வீட்டில் மது அருந்துகொண்டிருந்துள்ளார். அப்போது உதயகுமாரின் நண்பன் மாணிக்கவேல், மணிமேகலை உடை மாற்றியதை எட்டிப்பார்த்துள்ளான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிமேகலை, கணவரிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். ஆனால் அதனை காதில் வாங்காத உதயகுமார் மனைவியிடம் சன்டையிட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து உறவினர்களிடம் கூறிய மணிமேகலை பொலிஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்துகொண்ட உதயகுமார், மணிமேகலை மீது கோபமடைந்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிமேகலையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட மணிமேகலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தலைமறைவாக உள்ள உதயகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்