போதைக்கு அடிமையான கணவன்... இரவு வீட்டுக்கு வந்ததும் நடந்த துயர சம்பவம்!

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் குடியை மறக்க மாத்திரை கொடுத்த மனைவியை கணவர் அடித்தே கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த ரமேஷ் இறைச்சி கடை நடத்தி வருகிறார், இவருக்கு இரண்டு மனைவிகள், ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ் தினமும் குடித்துவிட்டு மனைவிகளிடம் சண்டையிடுவது வழக்கம்.

இதனால் குடியை மறக்க மாத்திரை வாங்கி கொடுக்கலாம் என இருவரும் முடிவு செய்தனர், இதன்படி சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வந்த ரமேசுக்கு மாத்திரை கொடுத்துள்ளனர்.

இதை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் மயக்கம் வர சந்தேகமடைந்த ரமேஷ், எனக்கு என்ன கொடுத்தீர்கள்? என கேட்டுள்ளார்.

குடியை மறக்க மாத்திரை என கூறியதும், ஆத்திரத்தில் கட்டையை எடுத்து இருவரையும் சரமாரியாக அடித்துள்ளார்.

இதில் முதல் மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார், இரண்டாவது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், முதல் மனைவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளியான ரமேஷ் பொலிஸ் நிலையத்தில் சரணடைய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்