பெண் மாயம் .... 'என்னை காப்பாற்றுகள்...' இரத்தில் பெண் குளியல் அறையில் எழுதியிருந்த வாசகம்

Report Print Abisha in இந்தியா

குளியல் அறையில் பெண் ஒருவர் காப்பாற்றுங்கள் என்று எழுதியிருந்த நிலையில், அவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தில், சின்னதிருப்பதி பகுதியில் குடியிருப்பவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ் செல்வி. ஹரிஹரன் வேலைக்கு சென்று திரும்பியபோது தமிழ்செல்வி வீட்டில் இல்லை.

எங்கும் தேடி பார்த்த அவர், வீட்டின் குளியல் அறையில்,”விமல் ஆளுங்க... காப்பாற்றுங்கள் ஹரி” என்று இரத்தக்கறையில் எழுதப்பட்டிருந்தது. மேலும், இரத்தக்கறை படிந்த hockey மட்டையும் வீட்டில் கிடந்துள்ளது.

உடனடியாக ஹரிஹரன் பொலிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழ் செல்வி எங்கே போனார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

தமிழ்ச்செல்வி கொல்லப்பட்டிருக்கலாம் என்று கோணத்தில் பொலிஸ் தரப்பில் விமல் மற்றும் ஹரிஹரனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்