6பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ... பஞ்சாயத்தில் சிறுமிக்கு வழங்கப்பட்ட கொடூர தீர்ப்பு

Report Print Abisha in இந்தியா
1540Shares

6பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை பஞ்சாயத்தார், கொடூர தீர்ப்பு வழங்கி துன்புறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் காயா மாவட்டத்தில் மாலையில் சாலை அருகில் நின்று கொண்டிருந்த சிறுமியை 6பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக தூக்கி சென்றுள்ளது. பின் இரண்டு நாள் பஞ்சாயத்து கட்டிடத்தின் மேற்பகுதியில் வைத்து அந்த 6பேரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர். பின் சிறுமியை அந்த கும்பல் அங்கேயே விட்டுச்சென்றுள்ளது. சிறுமி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்ட பெண் ஒருவர் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின் சிறுமியை மீட்ட அவர்கள், பஞ்சாயத்தில் தகவல் கொடுத்து ஆள் கூட்டப்பட்டுள்ளது. அங்கு கூடியவர்கள், சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு தண்டனை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்கள் சிறுமியை மொட்டையடித்து கிராமத்தை சுற்றிவர ஆணையிட்டுள்ளனர். இதற்கு காரணம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 6பேரும் பஞ்சாயத்தாரின் உறவினர் ஆவர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர். பொலிசில் புகார் தொரிவித்துள்ளார். பொலிசார், பஞ்சாயத்தில் தீர்பளித்த 5பேரையும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவரையும் கைது செய்துள்ளனர். மற்ற 5பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.

அதில் தேவ் லால் என்பவரை சிறுமியே அடையாளம் காட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்