அழுகிய நிலையில் மனைவி... 11 வருடங்களுக்கு பின் முதல்முறையாக பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்ட கணவன்!

Report Print Abisha in இந்தியா

சென்னை கொட்டிவாக்கம் அருகே உடல் அழுகி மனைவி உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற கோரிய கணவனின் செயல் கண்ணீர் வரவழைத்துள்ளது.

கொட்டிவாக்கம் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் ராஜகோபால், அவரது மனைவி கல்யாணி. 11 வருடங்களுக்கு முன் அந்த இடத்தில் குடிபுகுந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு மகள் மட்டும் இருந்த நிலையில், அவரும் கடந்த 8வருடங்களுக்கு முன் இறந்ததாக கூறப்படுகின்றது.

தனியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர், வீட்டின் அருகில் யாரிடமும் பேசுவதில்லையாம். சம்பவ தினத்தன்று, ராஜகோபால் என்மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார் அவருக்கு உதவுங்கள் என்று பக்கத்து வீட்டாரிடம் கண்ணீர் விட்டு அழுது முதல்முறையாக பேசியுள்ளார். ஆச்சரியம் அடைந்த பக்கத்து வீட்டுகாரர்கள், வீட்டினுள் சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில் கல்யாணி உடல் பாதி அழுகி உடல் சுற்றி மலம், சிறுநீர் என்று கோரமான முறையில் படுத்திருந்தார். இந்நிலையில், அவர்கள் 108ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸில் கல்யாணியை ஏற்ற ராஜகோபால் மறுத்துள்ளார். எனவே உறவுகள் என்ற அறக்கட்டளைக்கு தகவல் கொடுத்து வரவழைத்து ரோஜகோபலிடம் பேச வைத்தனர்.

பலமணி நேரம் நடந்த பேச்சு வார்தைக்குபின் ராஜகோபால் கால்யாணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தார்.

மருத்துவர்கள் கல்யாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உடற்கூறுக்கு பின் கல்யாணியின் உடல், ராஜகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து பேசிய அருகில் வசிப்பவர்கள், 11ஆண்டுகளுக்கு முன் இந்த குடும்பம் இங்கு குடியேறியது. யாரிடமும் பேசி பார்த்ததில்லை. ராஜகோபால், வெளியில் வந்து எதேனும் வாங்கி கொண்டு உள்ளே செல்வார். வீட்டில் ஒரு மின் விளக்கு மட்டும் எரியும், நாங்கள் அவர்களை பார்த்து சிரித்தாலும் அவர் பேசுவதில்லை. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசும் ஆனால் அவர்கள் வெளியில் வருவதும் பேசுவதும் தவிர்த்ததால் நாங்கள் அவர்களிடம் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்