மருத்துவர்கள் கூறிய தவறான தகவல்... அதிர்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! பரபரப்பு சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் தனியார் மருத்துவமனை தவறுதலாக கூறிய தகவலைக் கேட்டு, பெண்ணொருவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சந்தேகித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள எண்ணினார்.

உடனே அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், உடற்பரிசோதனை செய்து கொண்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சோதனையின் முடிவில் குறித்த பெண்ணுக்கு எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தனர்.

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், மனமுடைந்ததால் கோமா நிலைக்கே சென்றுவிட்டார். அதன் பின்னர் அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையின் சோதனை முடிவுகள், அரசு மருத்துவமனையில் மறுபடியும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு எய்ட்ஸ் இல்லை என்றும், தனியார் மருத்துவமனை தவறான தகவலை கூறியதும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் சிம்லாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அம்மாநில சட்டப்பேரவையிலும் இவ்விவகாரம் எதிரொலித்தது.

இதனைத் தொடர்ந்து கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை மருத்துவமனை நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இமாச்சல பிரதேச முதல்வர் உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்