ஆசை ஆசையை காதல் திருமணம்... வெளியில் சென்று திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in இந்தியா
915Shares

தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணம் முடிந்த 4 மாதங்களில் புதுமணப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஆஷா என்பவரை சில வருடங்களாகவே காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த மூன்று மாதங்கள் வரை தம்பதியினர் இருவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். ஆனால் அதன்பிறகு தான் இருவருக்கும் இடையே சிறிது சிறிதாக கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிரபாகர், கதவை திறந்த போது ஆஷா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், ஆஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஆஷாவின் பெற்றோர் தங்களுடைய மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், வரதட்சனை ஏதும் கேட்டு பிரபாகர் கொடுமைப் படுத்தினாரா அல்லது ஆஷாவுக்கு ஏதேனும் தனிப்பட்ட பிரச்சனையா என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்