குழந்தை பெற்றெடுத்த 16 வயது சிறுமி! அது எனது குழந்தை என கூறிய இன்னொரு பெண்.. வெளியான உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 16 வயது சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையை விலைக்கு வாங்கிய வடமாநில தம்பதி வசமாக சிக்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பமாக இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தையை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாதிரியார் வல்ராம் - கிறிஸ்டி தம்பதியினர் விலை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த குழந்தையை மஞ்சள் காமாலை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அது தனது குழந்தை என 45 வயது மதிக்கத்தக்க பெண்ணான கிறிஸ்டி கூறினார். ஆனால் கிறிஸ்டியின் வயதை வைத்து இந்த குழந்தை, அவருடைய குழந்தை இல்லை என்று ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார்.

அப்போது குழந்தையை சட்டத்திற்குப் புறம்பாக ராஜஸ்தான் கொண்டுசெல்ல முயற்சி நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து வல்ராம், கிறிஸ்டி தம்பதி மற்றும் குழந்தையை அவர்களுக்கு வாங்கி கொடுத்த இம்மானுவேல் ஆகியோருடம் தேவ்ஆனந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணையில் குழந்தையின் தாயான 16 வயது சிறுமி குறித்து மற்றும் இது தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்