பேருந்தில் பெண்களுக்கு முன் திடீரென பயணி செய்த செயல்: புரட்டி எடுத்த நடத்துனர்கள்.. வெளியான வீடியோ

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் கும்பலாக பயணி ஒருவரை அடித்து நொறுக்கிய வீடியோ குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. தேனியை சேர்ந்த விஜய் என்ற பயணி பேருந்தில் திண்டுக்கல் பயணித்துள்ளார். பின்னர், பேருந்திலேயே பெண்களுக்கு முன்னிலையில் விஜய் உடை மாற்ற முயன்றுள்ளார்.

இதைக்கண்ட ஓட்டுநர், நடத்துனர், பேருந்திற்குள் உடை மாற்றக்கூடாது, பேருந்து நிலையத்தில் உள்ள உடைமாற்றும் அறைக்கு சென்று மாற்றும் படி கூறியுள்ளனர். இதனையடுத்து, சூடான வாதங்கள் சச்சரவாக மாற விஜயை பேருந்தில் இறக்கி விட்டுள்ளனர்.

பின்னர், பேருந்து ஓட்டுநர் முதலில் விஜயை தாக்கியுள்ளார், அதற்கு அவர் பதிலடி கொடுக்க, சுற்றி நின்றுக்கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர்கள் கும்பலாக விஜயை புரட்டி எடுத்துள்ளனர்.

சம்பவயிடத்தை விட்டு பயணி விஜய் சென்ற நிலையில், சம்பவயிடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர். விஜய் மதுபோதையில் இருந்ததாக போக்குவரத்து ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனினும், சம்வயிடத்தில் இருந்தவர்கள் இரு தரப்பினரும் மேல் தவறு இருக்கிறது என்று கூறி, விஜயை தாக்கும் வீடியோவை பொலிசாரிடம் காண்பித்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்