பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண்ணுக்கு நண்பர்களால் நேர்ந்த கொடூரம்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் பிறந்தநாள் கொண்டாடிய 19 வயது இளம்பெண் ஒருவர், தனது நண்பர்களாலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தனது பிறந்தநாளை கொண்டாட மும்பைக்கு சென்றுள்ளார். தனது நண்பர்களின் அழைப்பின் பேரில் செம்பூருக்கு சென்ற அவர், அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அதன் பின்னர், குறித்த இளம்பெண்ணின் நண்பர்கள் 4 பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தன் வீட்டிற்கு திரும்பிய அப்பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரிடமும் கூறவில்லை.

இந்நிலையில் அவருக்கு அடி வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அப்பெண்ணின் பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குறித்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்று சந்தேகமடைந்து கேட்டுள்ளனர்.

அப்போது அப்பெண் உண்மையை ஒப்புக் கொண்டதுடன், நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், பெண்ணின் நண்பர்களை தேடி வந்த நிலையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் மோசமடைந்துள்ளது.

இந்நிலையில், அப்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்