பாஜக தலைவரால் பாலியல் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு

Report Print Basu in இந்தியா

கடந்த சனிக்கிழமை காணாமல் போன பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுவாமி சின்மாயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த உத்தரபிரதேச சட்டக் கல்லூரி மாணவி ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச காவல்துறை குழு ஒன்று மாணவியை ராஜஸ்தானில் கண்டுபிடித்து இன்று காலை அழைத்துச் சென்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தப் பெண் ஒரு நண்பருடன் காணப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும் செல்வாக்குமிக்க பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான சுவாமி சின்மாயானந்த்தால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட ஒரு நாள் கழித்து சட்டக் கல்லூரி மாணவி காணாமல் போனார்.

சட்டக் கல்லூரி மாணவி காணாமல் போனது தேசிய தலைப்புச் செய்தியாக அமைந்தது. மாணவி வெளியிட்ட வீடியோவில், சின்மயானந்த் தன்னையும் சேர்த்து பல சிறுமிகளின் வாழ்க்கையை பாழாக்கிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

சுவாமி சின்மயானந்திற்கு எதிராக அனைத்து ஆதாரங்களையும் வைத்திருப்பதாக அவர் கூறினார், அவர் மிகவும் சக்திவாய்ந்தவர், மாவட்ட நீதிபதி மற்றும் எஸ்.பி. என யாரும் அவருக்கு எதிராக செயல்பட முடியாது என கூறியிருந்தார்.

Law Student Who Accused BJP Leader Swami Chinmayanand Of Sexual Harassment Goes Missing

இந்நியைில் காணாமல் போன மாணவி ராஜஸ்தானில் இருப்பதை உறுதிப்படுத்திய உத்தரபிரதேச காவல்துறை, உத்தரபிரதேசத்தின் Shahjahanpur காவல்துறையினர் மாணவியை தனது நண்பருடன் ராஜஸ்தானில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று ட்வீட் செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்