இலங்கை போரில் காணாமல் போனவர்கள் நிலை.... தகவல் கேட்கும் சீமான்

Report Print Arbin Arbin in இந்தியா

இலங்கை போரில் சரணடைந்தவர்களின் தற்போதைய நிலை இப்போது எப்படி இருக்கிறது என்ற பட்டியலை இலங்கை அரசு வெளியிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

உலக காணாமல் போனோர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இலங்கை போரில் காணாமல் போன தமிழர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் சென்னையில் சீமான் பேசியுள்ளார்.

அப்போது அவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழப்போரில் காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள் இலங்கையில் தற்போதும் போராடி வருகிறனர்.

போரில் சரணடைந்தவர்கள் யார் அவர்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்ற பட்டியலை இன்னும் இலங்கை அரசு வெளியிடவில்லை.

அதனை இலங்கை அரசு பகிரங்கப் படுத்த வேண்டும் என்றார். மட்டுமின்றி சரணடைந்த போர்க்கைதிகள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர், இதற்கு சர்வதேச விசாரணை தேவை. என சீமான் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்கத்தால் சிறைவைக்கப்பட்ட அனைவரின் பட்டியலையும் உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்