வீட்டில் தனியாக இருந்த பெண்! குளியலறை சுவற்றில் ரத்தத்தில் எழுதியிருந்த வரிகள்.. வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மாயமான தொழிலதிபரின் இரண்டாவது மனைவி வழக்கில் திடீர் திருப்பமாக அவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். ஜவுளி தொழில் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர்

13 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்செல்வி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எட்டாம் வகுப்பு பயிலும் மகன் உள்ளான்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்துக்கு சென்ற ஹரிகிருஷ்ணன், தனது வீட்டில் தனியாக இருந்த மனைவி தமிழ்செல்வி காணாமல் போயுள்ளாதாகவும், வீடு திறந்து இருப்பதுடன் குளியல் அறையில் ரத்தக்கறைகள் இருப்பதாகவும் பொலிசாரிடம் பதற்றத்துடன் கூறினார்.

பொலிசார் அவர் வீட்டுக்கு சென்ற நிலையில் வீட்டின் குளியலறையில் உள்ள சுவற்றில் ரத்தக் கறைகள் இருந்துள்ளது.

இதோடு சுவற்றில் விமல் என்றும் அதன் கீழே காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் எனவும் ரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது.

ரத்தம் தோய்ந்த நிலையில் ஹாக்கி மட்டை ஒன்று இருப்பதும் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டது.

இதனால் தமிழ்செல்வி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே ஹரிகிருஷ்ணன் பைனாஸ் விடும் நபர்களிடம் பணம் வசூலிக்கும் வேலையை விமல் என்பவர் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுவற்றில் அவரது பெயர் ரத்தத்தில் எழுதப்பட்டிருந்தால், அவர் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

இந்த சூழலில் இறந்திருக்கலாம் என கருதப்பட்ட தமிழ்ச்செல்வி உயிருடன் உள்ளதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அவர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தமிழ்செல்வியை மீட்க திருப்பூர் விரைந்துள்ள பொலிசார் அவரை மீட்ட பின்னர் தான் நடைபெற்ற சம்பவத்துக்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்