50 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஸ்பெயின் சமூக சேவகி: சோகத்தில் கிராம மக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

விசாவை புதுப்பிக்கும் மனு நிராகரித்ததால் 86 வயது ஸ்பெயின் நாட்டு சமூக சேவகி ஒருவர் இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 86 வயதான எனிடினா என்பவர் இந்தியாவின் ஒடிஸா பகுதிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்றுள்ளார்.

கன்னியாஸ்திரியான இவர் கஜபதி மாவட்டத்தில் உள்ள அலிகண்டா கிராமத்தில் உள்ள மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான சேவைகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது விசாவை புதுப்பிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 10 தினங்களில் இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பித்தது.

தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி டெல்லியில் இருந்து அவர் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மீண்டும் அவரை அலிகண்டா கிராமத்தில் தங்க வைக்க அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனிடினா, மாட்ரிட் கேபிட்டல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுவிட்டு 1966-ஆம் ஆண்டு பெர்ஹாம்பூருக்கு வந்துள்ளார். அவர் அங்கு தங்கி 5 ஆண்டுகளாக சமூக சேவை செய்து வந்தார்.

இதையடுத்து அவர் கடந்த 1971-ஆம் ஆண்டு அலிகண்டாவில் சின்னதாக மருத்துவமனை ஒன்றை தொடங்கி அங்குள்ள மக்களுக்கு சேவை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்