ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி... தக்க நேரத்தில் வந்து காப்பாற்றிய பொலிசார்

Report Print Basu in இந்தியா

உத்தரகண்ட் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ரயில்வே காவல்துறை உதவியாளர்களுடன் பெண் பிரசவித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துர்கியானா எக்ஸ்பிரஸ் ரயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த ரயில் ரூர்க்கி நிலையத்தில் நிறுத்தம் இல்லை, ஆனால் ரயிலில் இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்குச் சென்றதாக தகவல் கிடைத்தது, நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்தோம்.

அவர் குழந்தையை ரயிலிலே பிரசவித்த பிறகு, நாங்கள் தாய், குழந்தை இருவரையும் இங்குள்ள பொது மருத்துவமனைக்கு மாற்றினோம், என்று ரயில்வே பொலிஸ் துணை ஆய்வாளர் அமித் குமார் தெரிவித்தார்.

பீகாரில் வசிக்கும் சீமா என்ற பெண், பிரசவத்திற்காக தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். குழந்தையை பிரசவிக்க உதவிய ரயிலில் இருந்த பெண் பயணிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Railway Cops Help Woman Deliver Baby Inside Train In Roorkee

ரயிலில் உள்ள பெண் பயணிகளிடமிருந்து எங்களுக்கு உதவி கிடைத்தது. எங்களைப் பொருத்தவரை பயணிகளுக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்வது எங்கள் கடமையாகும் என்று அமித் குமார் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்