பலமுறை கூறியும் அவள் கேட்கவில்லை.. நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள்.. கணவரின் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மனைவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டு நாடகமாடிய கணவன் பொலிசாரிடம் சிக்கிய நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சியை அடுத்த ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (32). இவருக்கும் கெளசல்யா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி எட்டாண்டுகள் ஆகும் நிலையில் தம்பதிக்கு அபிராமி (7) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கெளசல்யாவை காணவில்லை என சக்திவேல் கடந்த 7ஆம் திகதி பொலிசில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கெளசல்யாவை தேடி வந்தனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்களிடையே விசாரணை செய்தபோது, கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததும், அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும் தெரியவந்தது.

இதனால் சக்திவேல் மீது சந்தேகம் ஏற்பட அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரைக் கொன்று சாக்கில் கட்டி கிணற்றில் வீசியதாக கூறி அதிரவைத்துள்ளார்.

பின்னர் கெளசல்யாவின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சக்திவேல் பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், நான் தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்கும் வேலை செய்கிறேன். பணி இடத்தில் அவளை பார்த்து விரும்பி திருமணம் செய்துகொண்டேன்.

ஆனால், நாளடைவில் கெளசல்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. கடந்த, யூலை 26-ம் திகதி எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து என் மனைவி ஓட்டம் பிடித்தார். அப்போது, நான் பெரிய கல்லை எடுத்து அவள் தலையில் வீசிய நிலையில் கீழே விழுந்தார்.

பிறகு, அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். கொலையை மறைக்க மனைவியின் உடலை சாக்கில் கட்டி, கிணற்றில் வீசிவிட்டேன்.

என் மனைவியின் குடும்பத்தினர் கேட்டபோது, என் மனைவியின் நடத்தை குறித்து திட்டிவிட்டு, நானும் அவரை தேடுவதுபோல அழுது நாடகமாடினேன். ஆனால், என் மனைவியின் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தால் பொலிசில் புகார் கொடுத்தேன்.

கெளசல்யாவின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் தான் நான் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்