மூன்று நாட்கள் கொடூர சித்திரவதை... ரூ.485 கோடி மதிப்பிலான பிட்காயினுக்காக நண்பனையே கொன்ற கும்பல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் குற்றுயிராக மீட்கப்பட்ட இளைஞர் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் நகரத்திலேயே குறித்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட இளைஞர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், அவரிடம் இருந்த 485 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயினை தங்கள் பெயரில் மாற்றிக்கொள்ள அவரது நண்பர்களே கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள அப்துல் ஷுக்கூர் என்ற 25 வயது இளைஞரே நண்பர்களால் கொடூர சித்திரவதைக்கு7 இரையாகி பின்னர் கொல்லப்பட்டவர்.

குற்றுயிராக கிடந்த ஷுக்கூரை டேராடூன் நகர மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துவிட்டு அந்த கும்பல் மாயமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஷுக்கூரின் நண்பர்கள் ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

10 பேர் கொண்ட கும்பலே ஷுக்கூரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக டேராடூன் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

காசர்கோடு பகுதியில் பிட்காயின் தொழில் செய்து வந்த ஷுக்கூர், அதன் மதிப்பு சரிவை கண்டதும், முதலீடு செய்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

இதனையடுத்து கேரளாவில் இருந்து தலைமறைவான ஷுக்கூர் நண்பரும் டேராடூன் மாணவரு,மான யாசின் என்பவரின் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

ஷுக்கூருடன் அவரது தொழில் பங்குதாரர்கள் 9 பேரும் டேராடூன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவரான ஆஷிக், தமது திட்டத்தை எஞ்சிய நண்பர்களிடன் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஷுக்கூரிடம் இருக்கும் 485 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் கடவுச்சொல்லை கேட்டு, இந்த 9 பேர் கும்பல் தொடர்ந்து 3 நாட்கள் ஷுகூரை தாக்கி சித்திரவதை செய்துள்ளது.

இதில் குற்றுயிராக மீட்கப்பட்ட ஷுக்கூரை அந்த குமப்லில் 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் அப்போது ஷுக்கூர் மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த அந்த ஐவரும் அங்கிருந்து மாயமாகியுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையிலேயே தற்போது இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்