அம்மாவின் தவறான தொடர்பை கண்டித்த மகன்... அவர் காது கொடுத்து கேட்காததால் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்த நபரின் கொலையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (45). இவர் அந்த பகுதியில் மின் சாதன பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்து ராஜா தனது வீட்டுக்கு மிதிவண்டியில் சென்ற போது மர்ம நபர்கள் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர்.

மேலும் ராஜாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த சத்துணவு அமைப்பாளரான திலகவதி (42), இவரது மகன் கவுதம் (22) ஆகிய 2 பேரையும் அந்த நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த தாய்-மகன் 2 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது ராஜாவுக்கும், திலகவதிக்கும் இடையே தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதை அறிந்த திலகவதியின் மகன் கவுதம் தனது தாயாரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்பை கைவிடவில்லை.

இதனால் கவுதம், ராஜா மற்றும் திலகவதியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

அதன்படி நேற்று முன்தினம் கடையில் இருந்து வந்த ராஜாவை, கவுதம் வழிமறித்து கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார்.

பின்னர் ஆவேசத்துடன் வீட்டிற்குச் சென்ற கவுதம், தாய் திலகவதியையும் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதோடு தாமும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது அம்பலத்துக்கு வந்து உள்ளது.

இதனிடையில் சிகிச்சையில் இருக்கும் கவுதமிடம் விசாரணை நடத்தப்படும் பட்சத்தில் மேலும் உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்