மனைவி குறித்து வெளியான தகவலால் மகிழ்ச்சியில் துள்ளிய கணவன்.. அடுத்த சில நிமிடங்களில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பிரசவத்தில் மனைவிக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தி வந்த சில நொடிகளில் தாயும், சேயும் இறந்துவிட்டதாக வந்த தகவல் கணவரையும் குடும்பத்தாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் நங்கவிளை பகுதியை சேர்ந்தவர் விஜின் (27).

இவருடைய மனைவி மெர்லின் திவ்யா (27). இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதற்கிடையே மெர்லின் திவ்யா கர்ப்பமானார். இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சென்று அடிக்கடி உடல் பரிசோதனை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திவ்யாவுக்கு லேசான பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக அதே மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்தார்.

பின்னர் நேற்று காலை 9.30 மணி அளவில் திவ்யாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறினர். இதனால் கணவர் விஜின் மற்றும் குடும்பத்தினர், மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அவர்களது மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. திடீரென திவ்யாவுக்கும், அந்த குழந்தைக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பின் தொடர்ந்து குடும்பத்தாரும் சென்றனர்.

அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதைக்கேட்டு விஜின் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் திவ்யா மற்றும் குழந்தையின் உடலை பார்த்து விஜின் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

இதனிடையில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் இருவரும் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அங்கு வந்த பொலிசார் அவர்களை சமாதானப்படுத்தி மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே திவ்யாவிற்கு சாதாரண பிரசவம் நடந்த பின்னர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அதில் குழந்தை இறந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் தாயை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...