பாடி கொண்டிருந்த போதே மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த பிரபல பாடகர்... கண்ணீர் வரவழைக்கும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜெர்ரி பஜ்ஜோடி மேடையில் பாடி கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த பிரபல கொங்கனி இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் ஜெர்ரி பஜ்ஜோடி.

இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வரும் இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு பேஜாய் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார்.

கன்னட பாடல் ஒன்றை அவர் பாடிக் கொண்டிருந்த போது திடீரென்று அப்படியே முன் பக்கமாக சரிந்து விழுந்தார்.

உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஜெர்ரி மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்