நெஞ்சுப்பகுதியில் நுழைந்து முதுகுக்கு பின்னால் வந்த 4 அடி இரும்பு கம்பி! தமிழக இளைஞரின் தற்போதைய நிலை என்ன?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் நான்கு அடி நீளமுள்ள கூர்மையான இரும்புக்கம்பி நபரின் நெஞ்சு பகுதியில் நுழைந்து முதுகுக்கு பின்னால் வந்த நிலையிலும் மருத்துவர்களின் துரிதமான செயல்பாட்டால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.

மதுரையை சேர்ந்த குருசாமி சென்ற வாரம் மதுபோதையில் நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி சாலை கட்டுமானப் பணி நடந்துகொண்டு இருந்த குழிக்குள் விழுந்துவிட்டார்.

அக்குழிக்குள் இருந்த 4 அடி நீள கூர்மையான இரும்புக் கம்பி குருசாமியின் கழுத்துக்குக் கீழே முன்பக்கமாக நெஞ்சு பகுதியில் நுழைந்து முதுகுக்குப் பின்னால் வந்து விட்டது.

இதையடுத்து உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இரவு 11.30 மணிக்கு ஆரம்பித்த அறுவை சிகிச்சை நான்கு மணி நேரம் நடைபெற்ற நிலையில் வெற்றிகரமாக அந்தக் கம்பி உடலிலிருந்து அகற்றப்பட்டது.

தற்போது குருசாமி உடல்நலம் தேறி வருகிறார். இது குறித்து மருத்துவர்கள் குழு கூறுகையில், அங்கிருந்த கிராம மக்கள் அவரை குத்தியிருந்த கம்பியை எடுக்காதது அவரின் அதிர்ஷ்டம்.

அனைத்துத் துறை சிறப்பு மருத்துவர்களும் எந்த நேரத்திலும் எங்கள் மருத்துவமனையில் தயார் நிலையில் இருப்பதால் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்