இந்தியாவில் விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில், அவன் அதற்கு சொன்ன காரணம் பொலிசாரை அதிர வைத்துள்ளது.
ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ்காந்தி விமானநிலையத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை இளைஞன் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விட்டிருந்தார்.
அதில், நாளை விமானநிலயத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போகிறேன் என்று கூறினார்.
இதனால் விமானநிலையம் முழுவதும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதோடு போன் நம்பரின் ஐபி முகவரியை வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் ஷிகாந்த் என்பவரை கைது செய்தனர்.
அதன் பின் அவரிடம் எதற்காக விமானநிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தாய் என்று கேட்ட போது,
நான் வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டுள்ள நிலையில் என் நண்பனான சாய்ராம் மேல்படிப்புக்காக கனடா செல்ல தயாரானான். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அவனை தடுக்க நினைத்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இதற்கு முன்னதாக, சாய் குறித்து பல முறை கனடா தூதரகத்து அவதூறான தகவல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகவும் சஷிகாந்த் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நண்பனை சந்தித்த சாய்ராம் அவரின் கையில் 500 ரூபாய் பணத்தை கொடுத்து போய்வருவதாக கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை மேல்படிப்புக்காக கனடா சென்றார்.