வெளிநாட்டில் இருந்து 12 வருடங்கள் கழித்து ஊருக்கு வந்த கணவன்.. வீட்டில் மகன் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா
3559Shares

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய சில நாட்களில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழ்க்கரையை சேர்ந்தவர் புகாரி அகமது (38). இவருக்கும் பாத்திமா (34) என்பவருக்கும் கடந்த 2004 இல் திருமணம் நடந்து. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் புகாரி மலேசியாவில் விசா இல்லாமல் தங்கியதால் அவர் அங்கு கைது செய்யப்பட்டு 12 வருடங்கள் சிறையில் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விடுதலையான புகாரி நான்கு நாட்களுக்கு முன்னர் சொந்த ஊரான கீழக்கரைக்கு வந்துள்ளார்.

ஊருக்கு வந்ததிலிருந்தே தினமும் அடிக்கடி மது அருந்தியுள்ளார் புகாரி. இதனால் கணவன் மனைவி இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவும் மனைவியுடன் சண்டை போட்ட புகாரி பின்னர் படுக்கையறைக்கு படுக்க சென்றார்.

காலையில் 8 மணி வரை கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த மகன் படுக்கை அறையின் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கு போட்ட நிலையில் புகாரி இறந்து கிடந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் புகாரியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்