திருமணமான ஒரு வாரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட புதுப்பெண்.. அவர் செல்போனில் இருந்த ஓடியோ!

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் திருமணமாகி ஒரு வாரத்துக்குள் மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரிசூலத்தை சேர்ந்த அபின்ராஜும், மனிஷாவும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக கூறி மனிஷாவை அவர் வீட்டிலிருந்து வெளியேற்றி தன்னுடைய உறவினர் வீட்டில் தங்க வைத்தார் அபின்ராஜ்.

இந்நிலையில், 6 மாதத்துக்கு முன்பு மனிஷா கர்ப்பமானார். இதனால் உறவினர் வீட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், தனியாக வீடு எடுத்து இருவரும் தங்கினர்.

அப்போதும் அபின்ராஜ் மனிஷாவை திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

ஒருநாள் ஏற்பட்ட சண்டையில் மனிஷாவின் வயிற்றில் அபின்ராஜ் ஓங்கி குத்தியதால், கர்ப்பம் கலைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அபின்ராஜ் தனது பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மனிஷாவை கல்யாணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து 7 நாட்கள் கழித்து மனிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என மனிஷாவின் அப்பாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை அவரின் செல்போனை பார்த்தபோது அதில் அதிர்ச்சியளிக்கும் ஓடியோ ஒன்று இருந்தது.

அதில், அபின் ராஜுக்கு அனிதா என்ற பெண்ணோடு தொடர்பு இருந்ததும், அந்தப் பெண்ணிடமும், அபின்ராஜுடமும் மனிஷா தாலி பிச்சை கேட்டு அழுததும், ஏற்கனவே கர்ப்பம் கலைந்தது குறித்தும் கண்ணீர் விட்டு பேசியது கேட்டு அதிர்ந்து போனார்.

அந்த ஆடியோ உரையாடலின் பகுதி,

மனிஷா: அனிதா... ப்ளீஸ் அனிதா, உன் காலில் விழுகிறேன். நீங்கள் பேசிக்கொள்ளுங்கள், என்னை தாலி மட்டும் கட்ட விடு.

அபின்ராஜ்: நான் சொல்வதைக் கேளு மனிஷா.. அனிதாவால்தான் நான் உயிரோடு இருக்கிறேன். குட்டிம்மா (அனிதா) நீ சொல்லு நான் என்ன செய்ய வேண்டும்.

அனிதா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

மனிஷா: என் நிலைமை உனக்கு புரியுதா அனிதா... நான்தான் தப்பு பண்ணிவிட்டேன். பிச்சை போடுகிற மாதிரி தாலி பிச்சை போடு அனிதா... ப்ளீஸ்

இதற்கு அனிதா மெளனமாக இருந்தார், இந்த ஓடியோவின் முடிவில், அனிதா ஒரு குழந்தை செத்துப்போய்ட்டு டா... அந்தக் குழந்தையோடு நானும் செத்துப்போயிருக்கலாம். அப்போதாவது நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். நான் எங்கு போவேன் அனிதா. எனக்கு தாலிப் பிச்சை மட்டும் கொடு என மனிஷா பேசுவது போல முடிகிறது

இதனால் அபின்ராஜ் தான் மகளை கொலை செய்திருப்பார் என பொலிசில் இது குறித்து அவர் புகார் கொடுத்தார்.

புகாரையடுத்து அபின்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மனிஷா எப்படி இறந்தார், அவரை அபின்ராஜ் ஏன் கொன்றார் என்றெல்லாம் பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்