விமானத்தில் 7 மணி நேரம் உணவு-தண்ணீரின்றி சிக்கி தவித்த பயணிகள்? நடந்தது என்ன? விமான நிறுவனம் விளக்கம்

Report Print Santhan in இந்தியா

இண்டிகோ விமானத்தில் பயணிகள் சுமார் 7 மணி நேரம் சிக்கி, தண்ணீர், உணவு இல்லாமல் தவித்துள்ளனர்.

இந்தியாவில் மும்பை மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில், விமான சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மும்பையிலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய 280 விமானங்களின் சேவை தாமதமானதாக அறிவிக்கப்பட்டது.

மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லும் இண்டிகோ விமானம் நேற்று மாலை 3.15 மணிக்கு புறப்பட தயாராக இருந்ததால், விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏற்றப்பட்டனர்.

அப்போது திடீரென்று கடும் மழை பெய்ததால், விமானம் புறப்படுவதற்கு தாமதமாகியுள்ளது. விமானி மழை பெய்வதால், புறப்பட அரை மணி நேரம் தாமதம் ஏற்படும் என்று கூறினார்.

அதன் பின் அடுத்தடுத்து அரைமணி நேரத்திற்கு ஒவ்வொரு முறையும், அரை மணி நேரம் ஆகும், அரைமணி நேரம் ஆகும், என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்ததால், பயணிகள் கோபத்தின் உச்சிக்கு சென்றனர்.

விமானத்தில் இருந்த சில பயணிகள் தங்களின் நிலையை டுவிட்டரில் பதிவேற்றம் செய்து வந்தனர். ஒரு சிலர் விமானத்தில் இருந்த பணிப்பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி விமானத்துக்குள் உணவும் தண்ணீரும் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படி 7 மணி நேரம் சென்ற பின்னர் விமானம் 10 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

இது குறித்து இண்டிகோ விமானம் கூறுகையில், தொடர் மழை காரணமாக விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கிவிட்டது.

விமானங்களின் வரவு தாமதமாகிவிட்டது. புறப்பட வேண்டிய விமானங்களுக்கும் கால தாமதமாகிவிட்டது. அதோடு, கேப்டன் உள்ளிட்ட ஊழியர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவதற்கு இயலாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்