15 வயது வீராங்கனை தனிமையில் இருந்த போது பயிற்சியாளரால் நடந்த கொடூரம்

Report Print Vijay Amburore in இந்தியா

கோவாவில் நீச்சல் அணியின் மாநில தலைமை பயிற்சியாளர் 15 வயது சிறுமியிடம் அத்துமீறும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

கோவா நீச்சல் கழகத்தில் (ஜிஎஸ்ஏ) பணியாற்றும் பயிற்சியாளரான சூரஜித் கங்குலி, தனக்கு கீழ் பயிற்சி பெற்ற 15 வயது சிறுமியிடம் பல நாட்களாகவே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரை சிக்கவைக்க முடிவெடுத்த சிறுமி, அவர் வருவதற்கு முன்கூட்டியே அறையில் தன்னுடைய செல்போனை வைத்து, அத்துமீறுவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து, இணையதளவாசிகள் பயிற்சியாளருக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

சமூகவலைத்தளங்களில் வெளியான தொடர்ச்சியான கருத்துக்களால், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நான் இந்த விவகாரத்தை கடுமையான கண்ணோட்டத்துடன் உற்றுநோக்குகிறேன். கோவா நீச்சல் கழகம் பயிற்சியாளர் சூரஜித் கங்குலியின் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது.

இந்த பயிற்சியாளர் இந்தியாவில் எங்கும் பணியாற்றவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு நான் இந்திய நீச்சல் கூட்டமைப்பைக் கேட்டுக்கொள்கிறேன். இது அனைத்து கூட்டமைப்புகளுக்கும், துறைகளுக்கும் பொருந்தும் என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் பேசிய கொல்கத்தா பொலிஸார், “சிறுமி அளித்த பதிப்பின் அடிப்படையில், நாங்கள் நேற்று முறையான வழக்கினை பதிவு செய்துள்ளோம். ஆனால் இந்த வழக்கு கோவா பொலிஸ் அதிகார வரம்பிற்குள் வருவதால், அது அங்கு மாற்றப்பட்டுள்ளது. கோவா பொலிஸார் இதை விசாரிக்கின்றனர் ”என்று கூறியுள்ளார்.

முன்னதாக சர்வதேசப் போட்டிகளில் 12 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள சுரஜித் கங்குலி 1984-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதலாவது பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்