பிறந்தநாள் கேக்கில் விஷம் கலந்த தம்பி: பரிதாபமாக பறிபோன உயிர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

சொத்து தகராறு காரணமாக பிறந்தநாள் கேக்கில் விஷம் கலந்து அண்ணன் மற்றும் அவருடைய மகனை கொலை செய்த தம்பியை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தின் சித்திப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமையன்று 9 வயது சிறுவன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளான். அப்போது கேக் சாப்பிட்ட 39 வயது தந்தையும், அந்த சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனின் தாயும், சகோதரியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய சகோதரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், பாதிக்கப்பட்டவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது சகோதரர் புதன்கிழமை இரவு தனது சகோதரருக்கு விஷத்துடன் கூடிய கேக்கை அனுப்பியுள்ளார்.

அதை சாப்பிட்ட பிறகு, பாதிக்கப்பட்டவரும் அவரது மகனும் இறந்தனர். அவரது மனைவி மற்றும் மகளின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்