வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!

Report Print Vijay Amburore in இந்தியா

பாஞ்சாப் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பாஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தர் சிங் என்கிற இளைஞர், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஹர்பன்ஸ் கவுர் என்கிற இளம்பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஹர்பன்ஸ் கவுர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

அவரது குடும்பத்தினரும் பல இடங்களில் மகளை தேடி பார்த்து கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில், அரவிந்தின் தந்தை நேற்று காலை தன்னுடைய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய மகனும், ஹர்பன்ஸ் கவுரும் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தபடியே இறந்து கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்களுடைய செல்போனை ஆய்வு செய்ததில், இறப்பதற்கு முன்னர் ஹர்பன்ஸ் கவுர் தன்னுடைய பெற்றோரிடம் மன்னிப்பு கேட்பதை வீடியோவாக எடுத்து நண்பர்களின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோவில் ஹர்பன்ஸ் கவுர் மன்னிப்பு கேட்டதும், உரிமம் பெற்ற ஒரு துப்பாக்கியால் அவருடைய நெஞ்சு பகுதியில் அரவிந்த் சுடுகிறார். இதில் அவர் இறந்ததும், அரவிந்த் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்