வெளிநாட்டில் கணவன்! ஊரில் உள்பக்கமாக பூட்டியிருந்த 27 வயது மனைவி வசித்த வீடு.. உள்ளே சென்றவர்கள் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் உள்ளூரில் வசித்த மனைவி தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் உள்ள வடமட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஆரிப். இவர் துபாயில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி நிலோபர் பர்வீன் (27). தம்பதிக்கு ஆப்ரீனா (4) அப்ரா (2) ஆகிய இருபெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் பர்வீன் வீட்டு வாசல் திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அங்கு பர்வீன், ஆப்ரீனா, அப்ரா ஆகியோர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் 3 பேரது சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான விசாரணையில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் பர்வீன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்து அவர் இம்முடிவை எடுத்ததாக தெரிகிறது.

மேலும் அவருக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்டிஒ கண்மணியும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்