வீடியோ கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை.. மகன் செய்த கொடூர செயல்! பரபரப்பு சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் வீடியோ கேம் விளையாடியதை கண்டித்த தந்தையை, சரமாரியாக வெட்டிக் கொன்ற மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள காகதி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரப்பா கும்பார்(60). இவர் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஆவார். இவரது 21 வயது மகன் ரகுவீர், டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அத்துடன் பப்ஜி எனும் வீடியோ கேமை விளையாடுவதிலேயே பொழுதை கழித்துள்ளார்.

இதன் காரணமாக சங்கரப்பா தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு நடந்து வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது செல்போனுக்கு recharge செய்ய வேண்டும் என்று ரகுவீர் தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால், பணம் தரமுடியாது என்று மறுத்த சங்கரப்பா மகனை கடிந்துள்ளார். இதனால் கோபமடைந்த ரகுவீர், அக்கம்பக்கத்து வீட்டு ஜன்னலை கற்களால் தாக்கி உடைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரகுவீர் மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. உடனே ரகுவீரை அழைத்துச் சென்ற பொலிசார், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

அன்றைய தினம் நள்ளிரவு வரை ரகுவீர் பப்ஜி விளையாடியதைப் பார்த்து, அவரது தந்தை சங்கரப்பா திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆத்திரமடைந்த ரகுவீர், தனது தந்தையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அவர் தலையை துண்டாக வெட்டி வீழ்த்திவிட்டு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அக்கம் பக்கத்தினர் சத்தம்கேட்டு வந்து சங்கரப்பாவின் வீட்டிற்கு வந்தனர். அவர் கொடூரமாக இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சங்கரப்பாவின் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மகன் ரகுவீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers